முதலாம் பராந்தகன் (கி பி  907 - 955) மதுரை மீது படையெடுத்துச் சென்று பாண்டியரை வென்றதால் "மதுரை கொண்ட கோப்பரகேசரிவர்மன்" என்று அழைக்கப்பெற்றான். அவ்வேந்தன் நான்கு வேதங்களை ஓதும் அந்தணர்க்குந் தானமாக வழங்கியதால் இந்நகர்க்கு "மதுராந்தகச் சதுர்வேதிங்கலம்"  என்று கல்வெட்டுக் குறிப்பு காணப்படுகிறது.

       மதுரை அந்தகன் மதுராந்தகன் பாண்டிய நாட்டின் தலைநகராகிய மதுரையை அழித்ததால் "யமனைப் போன்றவன்“  என்பது பொருள்.

        சோழ மன்னர்கள் பாண்டியர்களை வெற்றி பெற்றதைப் பெரும் சிறப்பாகக் கருதினர். வரலாறு ஏடுகள் இதனை மிக விளக்கமாகக் கூறும். பராந்தகனே முதலில் தன்னை “மதுராந்தகன்“ என்று அழைத்துக் கொண்டான். பின்னர் ஆட்சிக்குவந்த , அரிசஞ்சயசோழனின் மகனான உத்தம சோழன் ஆகியோறும்  தங்களை, "மதுராந்தகன்“ என அழைத்துக் கொண்டார் என்பதும் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன.

       முதலாம் ராஜேந்திரனின் இளமைப் பெயரும் "மதுராந்தகன்“  என்பதாகும்.

        மதுராந்தகத்தில் உள்ள கொதண்ட ராமர் கோவில் கல்வெட்டுகளில் ஒன்று, "ஸ்வஸ்தி  ஸ்ரீ, ஸ்ரீ பராந்தகதேவற்கு   யாண்டு எழாவது ஜெயங்கொண்ட சோழ மண்டலத்துக் களத்தூற்கோட்டத்துத்தநியூர் ஸ்ரீ மதுராந்தகச் சதுர்வேதி மங்கலத்து" என்று தொடங்குகிறது.

        இதனால் மதுராந்தகத்திற்கு இதற்கு முன் எதாவது ஒரு இருந்திருக்க வேண்டும். முதலாம் பராந்தகன் தனது வெற்றியைக்கொண்டாடும்    வகையில், "மதுராந்தகம்" என்று தன்சிறப்புப்  பெயரிட்டு  நான்கு வேதம் ஓதும் அந்தணர்க்கு   இவ்வூரைத்  தானமாக வழங்கினான்.

மதுராந்தகத்தில் பெருச்சபை ஒன்று இயங்கிக் கோவில்களையும் ஊரையும் ஆண்டிருப்பதாகக் கல்வெட்டுக் குறிப்பில் அறிய முடிகிறது .

"தநியுர்" என்று குறிப்பிடப் படுவதால், எல்லா வளக்கலையும் உடைய உயிர் என அறியமுடிகிறது.

Your suggestion and ideas are invited...

Contact :Admin mail Email: admin@madurantakam.info

Lastly Updated on 30-08-2011 00:00 GMT+5.30. (For best view use IE 6 Above or Mozilla Firefox 3 Above)